சுடச்சுட

    

    கோத்தகிரி ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

    By கோத்தகிரி  |   Published on : 29th September 2015 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோத்தகிரியை அடுத்துள்ள ஆதிவாசி கிராம மக்களுக்கு உபாசி-கேவிகே, ஐசிஏஆர் சார்பில் மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு, உபாசி - கேவிகே தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஆராய்ச்சியாளர் சண்முகம் வரவேற்றார்.

    தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பால்ராசு, ஆதிவாசி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு காய்கள், பழங்களின் நாற்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து, 105 கோழிகள், 3 ஆடுகள், 2 மாடுகள் ஆகியவை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. ஆடுகளுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மருந்து, சிகிச்சைகளை மருத்துவர்கள் பிரபு, பிரேமா ஆகியோர் மேற்கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து, பால்ராசு பேசுகையில், ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்க உபாசியுடன் இணைந்து தேயிலை வாரியமும் செயல்படும். தேயிலை தவிர குருமிளகு, தென்னை வளர்ப்பு, காபி, ஆடு, கோழி, மாடு ஆகியவை வளர்ப்பில் விருப்பம் உள்ளவர்கள் தேயிலை வாரியத்தை அணுகி பயனடையலாம்.

    மேலும், சுகாதாரத்தைப் பேணி காத்திட வீட்டுக்கு வீடு கழிப்பிடம் அமைக்க வேண்டும். அதற்காக, தேயிலை வாரியம் சார்பில் ஆதிவாசி மக்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளோம் என்றார். ஊர்த் தலைவர் ராஜு நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai