தோடர்களின் மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகப் புகார்
By உதகை | Published on : 29th September 2015 05:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உதகை, காந்தல் பகுதியிலுள்ள தோடர் இன மக்களின் மேய்ச்சல் நிலத்தை அரசியல் கட்சியைச் சேர்ந்தோர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பி.சங்கரிடம் தோடர் இன மக்கள் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
உதகையில், காந்தல் மந்து பகுதியில் தோடர் இன மக்களின் குடியிருப்பு உள்ளது. இதையொட்டியுள்ள நிலம் தோடர்களின் கால்நடைகள் மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டது. காப்புக் காட்டை ஒட்டியுள்ள இந்நிலத்திற்கு அருகில் தோடர் இன மக்களுக்கு தொகுப்பு வீடு கட்டிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் தொகுப்பு வீடுகளுக்கான கட்டுமானப் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று பணிகளை நிறுத்தச் சொல்லி மிரட்டியுள்ளனர். மேலும், அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி தகராறு செய்து வருகின்றனர்.
எனவே, இதுதொடர்பாக தோடர் இன மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், அந்த நிலம் தொடர்பான பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.