சுடச்சுட

  

  நீலகிரி மாவட்டத்தை வெறிநாய்க் கடி இல்லாத மாவட்டமாக அறிவிக்க முடிவு

  By உதகை  |   Published on : 29th September 2015 05:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீலகிரி மாவட்டத்தை வெறிநாய்க்கடி இல்லாத மாவட்டமாக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

   சர்வதேச வெறிநாய்க் கடி தினத்தையொட்டி, உதகை அருகே உள்ள அருவங்காடு பகுதியில் இயங்கி வரும் உலகளாவிய கால்நடை மருத்துவ சேவை அமைப்பின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

   நாய்களுக்கான அறக்கட்டளை, இயற்கை, விலங்குகளுக்கான இந்தியத் திட்டத்தின் ஆதரவுடன் இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது.

   இதில், நாய்களுக்கான மருத்துவமனை, கால்நடைகளுக்கான குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மையம் ஆகியவை இயங்கி வருகின்றன. இங்கு வரும் கால்நடை மருத்துவர்களுக்கு ஆண்டுதோறும் 2 வாரங்களுக்கு அறுவை சிகிச்சைக்கான சிறப்பு பயிற்சியும் வழங்கப்படுகிறது.

   மேலும், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. இதுவரை நீலகிரியில் 16 ஆயிரம் நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை, 30 ஆயிரம் நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

   இதுதொடர்பாக, இந்த அமைப்பின் இயக்குநர் இலியானா ஆட்டர் கூறியது:  உலகளவில், ஆசியாவில், இந்தியாவில் தான் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் அதிகம். அதிலும், 15 வயதுக்கு உள்பட்டவர்களே அதிகளவில் உயிரிழக்கின்றனர். ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஏராளமானோர் ரேபிஸ் நோயால் உயிரிழக்கின்றனர். இந்தியாவில் இந்நோய் குறித்து அறிவியல் பூர்வமான கணக்கெடுப்பு இல்லாததால், சரியான புள்ளி விவரங்கள் இல்லை. ஆண்டுக்கு சுமார் 200 பேர் வரை இந்தியாவில் இந்நோய் பாதிப்பால் இறப்பதாகக் கூறப்படுகிறது.

   இவ்வமைப்பின் சார்பில் அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் நோய்த் தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது கோவா மாநிலத்தில் நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்பு தடுக்கக் கூடியதேயாகும். நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதால் இம்மாவட்டத்தை ரேபிஸ் நோய் இல்லாத மாவட்டமாக அறிவிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai