சுடச்சுட

  

  உதகையில் முத்ரா யோஜனா திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

   நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் சார்பில், சிண்டிகேட் வங்கியும், மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கியும் இணைந்து இம்முகாமை நடத்தின.

   இந்நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தொடங்கி வைத்தார். வங்கிகளின் சார்பில் 1,540 பயனாளிகளுக்கு ரூ. 264 லட்சத்திற்கான கடனுதவிக்கான ஆணைகளை வழங்கி அவர் பேசியதாவது:

   உற்பத்தி, வணிகம், சேவை துறைகளைச் சார்ந்த சிறு, குறுந்தொழில்களுக்கான முத்ரா யோஜனா கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, இத்திட்டம் குறித்த சிறப்பு முகாம் நாடு முழுதும் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. புதிய தொழில் முனைவோர் இக்கடனுதவி மூலமாக தங்களை உயர்த்திக் கொண்டு முன்னேற வேண்டும். தவணை தவறாமல் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

   மேலும், இத்திட்டத்தின்கீழ் அடமானம் தேவையில்லை. செயலாக்க கட்டணமில்லை. வட்டி ஆண்டுக்கு 10 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும். திட்டப் பயனாளிகளுக்கு முத்ரா டெபிட் கார்டு வழங்கப்படும். ஏடிஎம், மைக்ரோ ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கவும், பாஸ் இயந்திரங்களின் மூலமாக பொருள்கள் வாங்கவும் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்தார்.

   இந்நிகழ்ச்சியில், சிண்டிகேட் வங்கி கோவை மண்டல மேலாளர் மோகன்ராஜன் பேசுகையில், முத்ரா சிசு திட்டத்தின்கீழ் ரூ. 50,000 வரையிலும், முத்ரா கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரையிலும், முத்ரா தருண் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரபாரதி நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai