Enable Javscript for better performance
கோத்தகிரியில் காட்டெருமை அச்சுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தும் காட்டெருமைகளை வேலி அமைத்து கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

     கோத்தகிரி பேரூராட்சியின் 6-ஆவது வார்டுக்கு உள்பட்ட கிளப்ரோடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் நாள்தோறும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக வருவதால் இங்கு பசுந்தேயிலை பறிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

     மேலும், காட்டெருமை அச்சுறுத்தலால் நாள் ஒன்றுக்கு பல மணி நேரம் தேயிலைப் பறிக்க முடியாமல் போவதால், தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் கூலி கொடுப்பதை குறைத்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

     எனவே, இப்பகுதியில் வேலி அமைத்து காட்டெருமைகள் தேயிலை தோட்டத்துக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai