சுடச்சுட

    

    குன்னூர் நகராட்சி சார்பில் தூய்மை தமிழகம் திட்டத்தின் கீழ், குன்னூரில் கலைக்குழு சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, நாடகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

     இந்நிகழ்ச்சிக்கு, நகர்மன்றத் தலைவர் டி.சரவணகுமார் தலைமை வகித்தார். ஆணையர் பொறுப்பு நீலேஸ்வரன் முன்னிலை வகித்தார். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சையது முபாரக், கவுன்சிலர்கள் நசீர்கான், உமராணி, லலிதா, மாதா, மெகர்நிஷா, சுகாதார ஆய்வாளர் மால்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

     இதில், சுற்றுச்சூழல் சுகாதாரம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு, தனிநபர் கழிவறை, மழைநீர் சேகரிப்பு போன்றவைகளை மையப்படுத்தி கிராமிய பாடல்கள் மற்றும் நாடகம் மூலமாக மக்களுக்கு விழப்புணர்வை ஏற்படுத்தினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai