சுடச்சுட

    

    குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் "பொருளாதார சிந்தனை' என்ற தலைப்பில், குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் தேசிய அளவிலான 2 நாள் பொருளாதாரத் துறை கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

     கருத்தரங்குக்கு, முன்னாள் தமிழ்நாடு பொருளாதார இயக்கத் தலைவர் பேராசிரியர் ஆரியகுமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஷீலா மேரி, செயலாளர் அசுந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     பொருளாதார துறைத் தலைவர் ஹேமா ஸ்ரீ குமார் வரவேற்றார். இந்திய அறிவியல் ஆராய்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த பொருளாதார, நிதிச் செயலாளர் கோபால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

    இக்கருத்தரங்கில், கோவை, ஈரோடு, பொள்ளாச்சி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

     கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஹேமலதா ஜீவா, நித்யா, பொருளாதாரத் துறை மாணவிகள் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai