சுடச்சுட

    

    குன்னூர் லேம்ஸ்ராக் சுற்றுலாத்தல சாலையில் நேரிட்ட சாலை விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர்.

     குன்னூர் அருகே கம்பிசோலைப் பகுதியில் இருந்து லேம்ஸ்ராக் சுற்றுலாத் தலத்திற்கு  ஆரோக்கிய சின்னப்பராஜ், அவரது மனைவி பாக்கியா, குழந்தைகள் பிராங்கிளின், ஸ்டேன்லி ஆகியோர் சுற்றுலா வந்தனர்.

     அப்போது, அப்பகுதியில் அடர்ந்த மேகமூட்டம் ஏற்பட்டதால் எதிரே உள்ள சாலை  தெரியாமல் நிலைத்தடுமாறி கார் கவிழ்ந்தது. கார் சாலையின் தடுப்பில் மோதி விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

     இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு குன்னூர் அரசு லாலி  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து, மேல் குன்னூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai