குன்னூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ. 2.30 லட்சத்தை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து வாக்காளர்களுக்கு இலவசப் பொருள்கள், பணம் வழங்குவதைத் தடுக்க அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குன்னூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பர்லியாறு பகுதியில் தேர்தல் அதிகாரி புஷ்ப தேவி மேற்கொண்ட அதிரடி சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 1.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோன்று, கோத்தகிரி பகுதியில் சிறப்புப் பறக்கும் படையைச் சேர்ந்த வட்டாட்சியர் சிவக்குமாரி நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ. 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.