Enable Javscript for better performance
உதகை கோடை சீசன்: குதிரைப் பந்தயம் தொடங்கியது- Dinamani

சுடச்சுட

    

    கோடை சீசனையொட்டி, உதகையில் குதிரைப் பந்தயம் வியாழக்கிழமை தொடங்கியது.

    முதல் நாளான வியாழக்கிழமை வெல்கம் கோப்பைக்கான பந்தயத்தில் 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்றன. இப்பந்தயங்கள் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை 24 நாள்களுக்கு நடைபெற உள்ளன. மேலும், உதகையில் நிலவும் காலநிலைக்கேற்ப கூடுதல் பந்தயங்கள் நடத்த வாய்ப்புள்ளது.

    அடுத்த பந்தயங்கள் வரும் ஏப்ரல் 20, 23, 24, 27, 30 ஆகிய தேதிகளிலும், மே மாதத்தில் 1, 4, 7,8, 11, 14, 15, 18, 21, 22, 25, 28 மற்றும் 29-ஆம் தேதிகளிலும், ஜூன் மாதத்தில் 1, 4,5 மற்றும் 8-ஆம் தேதிகளிலும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai