Enable Javscript for better performance
பள்ளத்தில் தவறி விழுந்த காட்டெருமை சாவு- Dinamani

சுடச்சுட

    

    கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்த காட்டெருமை வியாழக்கிழமை உயிரிழந்தது.

     ஓவேலி பார்வுட் பகுதியிலுள்ள வனச் சரக அலுவலகத்தின் பழைய கட்டடத்தின் பின்புறம் உள்ள பள்ளத்தில் காட்டெருமை விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற வனச் சரக அலுவலர் கோவிந்தராஜ் பொக்லைன் இயந்திரம் மூலமாக காட்டெருமையை மீட்டனர்.

    வெளியே வந்த காட்டெருமை சிறிது தூரம் நடந்தவுடன் மேலும் நடக்கமுடியாமல் விழுந்து அதே இடத்தில் உயிரிழந்தது. இதுகுறித்து வனத் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai