Enable Javscript for better performance
குன்னூர்-உதகை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர்-உதகை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

    By குன்னூர்  |   Published on : 21st May 2016 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர் - உதகை சாலையில் மரம் விழுந்ததில் வெள்ளிக்கிழமை   போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதல் அருவங்காடு பகுதியில் பலத்த காற்று வீசியது.

    இதில், குன்னூர் - உதகை சாலையின் ஓரத்தில் இருந்த கற்பூர மரம் வேரோடு  சாய்ந்தது. இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவலறிந்த தீயணைப்புத் துறை அலுவலர் ராமலிங்கம் தலைமையிலான வீரர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பின்னர் மரம் அகற்றப்பட்டதையடுத்து, உதகை - குன்னூர் சாலையில் போக்குவரத்து சீரடைந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai