Enable Javscript for better performance
எல்லமலையில் இலவச மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கூடலூரை அடுத்துள்ள எல்லையோர கிராமங்களில் காவல் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    நீலகிரி மாவட்டக் காவல் துறை, ரெட்கிராஸ் சொசைட்டி இணைந்து  ஓவேலி பேரூராட்சிக்கு உள்பட்ட எல்லமலை கிராமத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா துவக்கி வைத்தார்.
    இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். கூடலூர் காவல் துணைக் காண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசலூ, குற்றப் புலனாய்வுத் துறை துணைக் கண்காணிப்பாளர் திருமேனி, கூடலூர் ஆய்வாளர் சக்திவேல், மசினகுடி ஆய்வாளர் சிவசங்கர், நடுவட்டம் ஆய்வாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கீழ் நாடுகாணி கிராமத்திலும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai