Enable Javscript for better performance
வால்பாறையில் யானைகள் அட்டகாசம்- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை பகுதியில் உள்ள எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த யானைகள், அங்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
    வால்பாறையை அடுத்துள்ள வில்லோனி எஸ்டேட்டின் லோயர் டிவிஷன் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிக்குள் 5 யானைகள் வியாழக்கிழமை இரவு புகுந்தன.
    இந்த யானைகள், குடியிருப்பு ஜன்னல்களைச் சேதப்படுத்தி, தும்பிக்கையை உள்ளேவிட்டு அங்குள்ள பொருள்களைச் சேதப்படுத்தின. யானைகள் புகுந்துள்ளதை அறிந்த தொழிலாளர்கள், பின்பக்கம் வழியாக நள்ளிரவில் வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.
    இந்நிலையில், அந்த யானைகள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தடுப்புச் சுவரை முட்டித்தள்ளின. இதில், அந்த சுவர் இடிந்தது. அப்பகுதி மக்கள் திரண்டு, சப்தம் போட்டும், தீப்பந்தங்களை ஏந்தியும் அங்கிருந்து யானைகளை விரட்டியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai