Enable Javscript for better performance
அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மஞ்சூர் அருகே இத்தலார் ஊராட்சிக்கு உள்பட்ட எமரால்டு சுரேந்தர் நகர் சமுதாயக் கூடத்தில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
      குந்தா வட்டாட்சியர் சிக்அனுமன் தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்டவை தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.
     இம்முகாமில் எமரால்டு, இத்தலார், அண்ணாநகர், சுரேந்தர் நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 25 மனுக்களில் 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இத்தலார் கிராம நிர்வாக அலுவலர் கலாமணி செய்திருந்தார்.
    மொடக்குறிச்சியில்...: மொடக்குறிச்சி தாலுகா நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
     நஞ்சை ஊத்துகுளி சமுதாயக்கூட வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மொடக்குறிச்சி வட்டாட்சியர் கருப்புசாமி தலைமை தாங்கினார். நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சித் தலைவர் த.மணி வரவேற்றார். புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா மாறுதல், உதவித் தொகை உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 89 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 34 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.
     முகாமில், நஞ்சை ஊத்துக்குளி பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் லலிதா பரமசிவம், துணை வட்டாட்சியர் புவனேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai