Enable Javscript for better performance
இ-சேவை மையங்களில்  வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்- Dinamani

சுடச்சுட

    

    இ-சேவை மையங்களில்  வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்

    By DIN  |   Published on : 15th October 2016 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டத்தில், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உள்ள இ-சேவை மையங்களில் ரூ. 25 கட்டணம் செலுத்தி வாக்காளர் வண்ண அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
      இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் வெளியிட்டுள்ள செய்தி:
     தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு சேவைகளைப் பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு,
    பெருமளவு பொதுமக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
     தற்போது, முதல்கட்டமாக அனைத்து இ-சேவை மையங்களிலும் ரூ. 25 கட்டணம் செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த இ-சேவை மையங்களை அணுகி தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் கூறி, வண்ண வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில்...:  ஈரோடு மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்களில் ரூ.25 கட்டணம் செலுத்தி வண்ண வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
      இது குறித்து ஈரோடு மாவட்ட செய்தி, மக்கள் தொடர்புத் துறை அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
     மாவட்டத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் தற்போது வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    எனவே, பொதுமக்கள் அரசு இ-சேவை மையங்களை அணுகி தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைத் தெரிவித்து ரூ. 25 கட்டணம் செலுத்தினால் வண்ண வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai