Enable Javscript for better performance
குன்னூர் பகுதியில் பரவலாக மழை:- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரவலாக  மழை பெய்ததால்,  தூதுர்மட்டம் டெரேமியா பகுதியில்  உள்ள பாலம் பழுதடைந்தது.
     குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்தது.
    இந்நிலையில், குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை 2 மணி நேரத்திற்கும் கூடுதலாக தொடர்ந்து மழை பெய்ததில் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
      தொடர் மழை காரணமாக, டெரேமியா பகுதியில் உள்ள பழைமையான பாலத்தில், பல இடங்களில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக, தூதூர்மட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்குச் செல்வோர்  பழுதடைந்த இந்தப் பாலத்தைக் கடந்து செல்லவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அசம்பாவிதங்கள்   நிகழும் முன் இந்தப் பாலத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று  இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai