Enable Javscript for better performance
மலைத் தோட்ட விவசாயத்துக்கு மானிய விலையில் உரம் வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மலைத் தோட்ட விவசாயத்துக்கு மானிய விலையில் உரம் வழங்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 15th October 2016 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மலைத் தோட்டக் காய்கறி விவசாயத்துக்கு மானிய விலையில் உரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
     மஞ்சூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்து போனதால், மலைத் தோட்டக் காய்கறி விவசாயம் வெகுவாக பாதித்துள்ளது.
    இதனால், மலைத் தோட்டக் காய்கறிகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
     இப்பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயத்தை பெரும்பாலானோர் மேற்கொண்டு வருகின்றனர்.
    உரம், மற்றும் இடுபொருள்கள், உபகரண பொருள்களின் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
     இந்நிலையில், கடந்த 4  நாள்களாக மஞ்சூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது பரவலான மழை பெய்து வருவதால் விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.  தோட்டத்தைப் பராமரிக்கும் பணியிலும் தீவிராக ஈடுபட்டு வருகின்றனர். உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பீன்ஸ், மேராக்காய், முட்டைகோஸ், காலிபிளவர் ஆகிய காய்கறிப் பயிர்களை நடவு செய்துள்ளனர். எனவே, மலைக் காய்கறிகள் விவசாயத்துக்குத் தேவையான உரங்களை தோட்டக்கலை துறை சார்பில் மானிய விலையில் தடையின்றி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுத்தியுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai