Enable Javscript for better performance
விரிவுரையாளர் மீது பாலியல் புகார்: நடவடிக்கை கோரி வகுப்புகளைபுறக்கணித்த மாணவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    விரிவுரையாளர் மீது பாலியல் புகார்: நடவடிக்கை கோரி வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்

    By DIN  |   Published on : 15th October 2016 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூரை அடுத்துள்ள ஆமைக்குளம் பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகக் கலை, அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, மாணவர்கள் வகுப்புகளை வெள்ளிக்கிழமை புறக்கணிப்பு செய்தனர்.
     ஆமைக்குளம் பகுதியில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகக் கலை, அறிவியல் கல்லூரியில் செய்முறைத் தேர்வு கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றபோது, தேர்வு எழுதிய மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து,
    சம்பந்தப்பட்ட விரிவுரையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் திங்கள்கழமை முதல் வலியுறுத்தி வந்துள்ளனர். கல்லூரி நிர்வாகம் இதைக் கண்டுகொள்ளாததால்,
    குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்த மாணவர்கள், அந்த விரிவுரையாளரைப் பணி நீக்கம் செய்து, நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் தேவாலா போலீஸார் சமரசம் பேசி, மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பிவைத்தனர்.
    இந்தச் சம்பவம் பெற்றோர்கள், மாணவ,மாணவியர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
      இதுகுறித்து கல்லூரி முதல்வர் எல்.ரமேஷ் கூறியது:
     மாணவர்களின் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணை முடிந்த பிறகுதான் இது குறித்த முழுவிவரம் தெரியவரும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai