Enable Javscript for better performance
விளைநிலங்கள்,  குடியிருப்புகளுக்குள் புகும் காட்டெருமைகளால் மக்கள் அச்சம்- Dinamani

சுடச்சுட

    

    விளைநிலங்கள்,  குடியிருப்புகளுக்குள் புகும் காட்டெருமைகளால் மக்கள் அச்சம்

    By DIN  |   Published on : 15th October 2016 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மஞ்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
     வனப் பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் அங்குள்ள குளம், குட்டைகள் அனைத்தும் வறண்டுவிட்டன.
    இதனால், தண்ணீரையும், உணவையும் தேடி வன விலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறி, அருகில் உள்ள  விளை நிலங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன.
    இதில், காட்டெருமைகள் அடிக்கடி குடியிருப்புகள்,  விளை நிலங்களுக்குள் வந்துசெல்வதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
     பகல் நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரத்திலும் கூட்டமாக நடமாடும் கட்டெருமைகளை விவசாயிகள் நவீன டார்ச் லைட் உதவியுடன் தனித்தனி குழுவாகச் சென்று விரட்டி வருகின்றனர். இருப்பினும், ஒருசில இடங்களில் நுழையும் காட்டெருமைகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன.
     மஞ்சூர் அருகே உள்ள தங்காடு ஓரநள்ளி பகுதியில் தேயிலைத் தோட்டங்களுக்குள் புகுந்து விவசாயிகளை அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது. மேலும் காத்தாடி மட்டம் பகுதியில் இருந்து தங்காடு ஒரநள்ளி கிராமத்துக்கு மக்கள் அடர்ந்த தேயிலைத் தோட்டம் வழியாக செல்லவேண்டி உள்ளதால் இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai