தமிழக சட்டப் பேரவை நூலகக் குழுவினர் உதகை மைய நூலகத்தை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக சட்டப் பேரவை உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் தலைமையிலான இக்குழுவினர் புதன்கிழமை நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்திலுள்ள நூலகங்களில் வாங்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை, பயனாளிகள், நகராட்சி, ஊராட்சி அமைப்புகளிடமிருந்து நூலக வரி நிலுவை குறித்தும், கிராமப் பகுதிகளில் அதிக அளவில் நூலகங்களைத் தொடங்குவது, அதிக அளவில் புத்தகங்களை வாங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், ரூ. 15 லட்சம் மதிப்பில் பந்தலூரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, இக்குழுவினர் உதகையில் செயல்பட்டு வரும் மாவட்ட மைய நூலகத்தை ஆய்வு செய்தனர். அங்கு பத்திரிகை, நாளிதழ் பிரிவு, நூல் இரவல் பிரிவு, குடிமைப் பணி பிரிவு, நூல் கலந்தறிதல் பிரிவு, இணையதளப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, நகல் எடுக்கும் பிரிவு, நூல் சேர்க்கை பிரிவு, மகளிர் பிரிவு, மின்னணு பத்திரிகை பிரிவு ஆகிய பிரிவுகளைத் தனித்தனியாக ஆய்வு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், பேரவை நூலகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.