வெலிங்டன் கன்டோண்மென்ட் போர்டு சார்பில் நவீன கழிப்பிடங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
வெலிங்டன் கன்டோண்மென்ட் நிர்வாகத்தின்கீழ் 7 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் பொது மக்களின் வசதிக்காக நவீன கழிப்பிடம் திறக்க கன்டோண்மென்ட் போர்டு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பிருந்தாவன், வெலிங்டன் பேருந்து நிலையம், கன்டோண்மென்ட் மைதானம், பிளாக் பிரிட்ஜ், பாய்ஸ் கம்பெனி, கேட்டில் பவுண்ட், எம்.ஆர்.சி. ஏரி, ராணுவ மருத்துவமனை, பேரக்ஸ், மேல் பேரக்ஸ், ஆகிய இடங்களில் நவீன கழிப்பிடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, ரூ. 95 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்தக் கழிப்பிடங்கள் திறப்பு விழாவுக்கு கன்டோண்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா தலைமை வகித்து கழிப்பிடங்களைத் திறந்து வைத்தார்.
இதில், கன்டோண்மென்ட் பொறியாளர் சுரேஷ், போர்டு துணைத் தலைவர் பாரதியார், உறுப்பினர்கள் துரைராஜ், சிவகுமார், செபாஸ்டியன், சீனிவாசன், மேரிஷீபா, லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து, கன்டோண்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ்வர்மா கூறியதாவது:
பொது மக்களின் நலன் கருதி அவர்கள் கூடும் இடங்களில் நவீன கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்
படுத்துவோர் ஒரு ரூபாய் நாணயத்தை அதற்குரிய பெட்டியில் போடவேண்டும். அப்போது, பச்சை விளக்கு எரிந்தவுடன் கதவு திறக்கும்.
உள்ளே நுழைந்தவுடன் தண்ணீர் தானாக
வெளியேறும். கழிப்பிடத்தைப் பயன்படுத்திய பின்னர் மீண்டும் தண்ணீர் தானாக வெளியேறி சுத்தம் செய்துவிடும்.
இந்த நவீன கழிப்பிடம் விமானத்தில் இருப்பதைப்போல அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.