பீட்ரூட் கிலோ ரூ. 40-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்த படியாக மலைத்தோட்டக் காய்கறிகள்தான் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
அதன்படி கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, முள்ளங்கி, முட்டை கோஸ், காளிபிளவர், பீட்ரூட், மேராக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் இங்கு விளைவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், போதிய மழையின்மையால் விவசாயிகள் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயத்துக்குப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்தக் காலநிலை மாற்றத்ததால் உருளைக் கிழங்கு, பீட்ரூட், முள்ளங்கி காய்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பரமூலை பகுதியைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் கூறியதாவது: கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் கேரட், பீட்ரூட், முட்டை கோஸ், காளிபிளவர் உள்ளிட்ட காய்கறிகளுக்குப் போதிய விலை கிடைக்காமல் கால்நடைகளுக்குத் தீவனமாக அவற்றை வழங்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது காய்கறிகள் நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில் பீட்ரூட் கிலோ ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.