மஞ்சூர் அருகே எமரால்டு பகுதியில் குட்டியுடன் சுற்றித் திரியும் காட்டுப் பன்றிகளைக் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஞ்சூர் அருகே எமரால்டு, இத்தலார், காந்தி கண்டி, கோத்தகண்டிமட்டம், லாரன்ஸ் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் அடர்ந்த தேயிலைத் தோட்டம், வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.
இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து கரடி, காட்டெருமை, சிறுத்தை, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு, தேயிலைத் தோட்டம், விளை நிலங்களுக்குள் புகுந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், விளை நிலங்களில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. குட்டியுடன் நுழையும் காட்டுப் பன்றிகள், பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை சேதப்படுத்தி வருகின்றன. மேலும், குடியிருப்பு பகுதிகளில் இவை நடமாடி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, இப்பகுதியில் நடமாடும் காட்டுப் பன்றிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதியில் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.