கூடலூரில் சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து புதன்கிழமை விபத்துக்குள்ளானது.
பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி, நீலகிரி மாவட்டத்துக்கு வரும் கேரள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உதகைக்கு சுற்றுலா வந்துவிட்டு கேரளத்துக் திரும்பிச் சென்றுகொண்டிருந்த வேன் கூடலூர், பழைய பேருந்து நிலையம் சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. நடைபாதை தடுப்பில் மோதி வேன் நின்றதால் பயணிகளுக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வேனை மீட்டு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.