அசல் ஓட்டுநர் உரிமம்: நீலகிரியில் சோதனை இன்றிஅறிவுறுத்தி அனுப்பப்பட்ட வாகன ஓட்டிகள்

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் கட்டாயமாக அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டுமென நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில்
Updated on
1 min read

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் கட்டாயமாக அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டுமென நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கான கால அவகாசம் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து, வாகன ஓட்டிகளுக்கு நீலகிரி மாவட்டப் போக்குவரத்துக் காவல் துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறி  அனுப்பிவைத்தனர்.
தமிழகத்தில் வாகன ஓட்டுநர்கள் தங்களது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டுமென தமிழக  அரசால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் இதுதொடர்பான சோதனை தீவிரப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  
இந்நிலையில், காவல் துறையினர் இதற்கான சோதனையை செப்டம்பர் 7-ஆம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் எனவும்,  8-ஆம் தேதி முதலே அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, நீலகிரி மாவட்டக் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் மீது உரிய நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டுமென காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டிருந்தபோதிலும் அந்த நடவடிக்கையை 8-ஆம் தேதி முதலே தீவிரப்படுத்தப் வேண்டும் என திடீரென தெரிவிக்கப்பட்டுள்ளது.  
அதைத்தொடர்ந்து, அனைத்து வாகன ஓட்டுர்களுக்கும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டுமென்ற அறிவுறுத்தல் மட்டும் புதன்கிழமை வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக  7,000 வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை தாற்காலிகமாகவும்,  நிரந்தரமாகவும் ரத்து செய்வது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்தது அலுவலகத்தின் மூலமாக நடவடிக்கைக் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினந்தோறும் குறைந்தபட்சமாக 10 பேருக்கு நிரந்தரமாகவும்,  3 அல்லது 6 மாதங்களுக்கு தாற்காலிகமாகவும் ஓட்டுநர் உரிமம் செய்யப்பட்டு வருகிறது.  
இந்நிலையில், தற்போதைய புதிய சட்டத்தின் காரணமாக அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டுவோர் சோதனைகளில் சிக்க வாய்ப்புள்ளது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், முதன்முறையாக சிக்குவோர் மீது  தொடக்கத்தில் ரூ. 500 அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  
இருப்பினும், எந்த நடவடிக்கையாக இருந்தாலும் செப்டம்பர் 8-ஆம் தேதியிலிருந்தே மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com