Enable Javscript for better performance
டெங்கு கொசு ஒழிப்புப் பணி- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரி அருகே உள்ள கேர்பன் கிராமத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
    கோத்தகிரி அருகே கேர்பன் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்கும் பணியும், மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது.
    இப்பகுதியில் தண்ணீர்  தேங்கி நிற்கும் இடங்களை ஆய்வு செய்து அவற்றை மூடியிட்டு வைக்கவும். தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள வீணான தொட்டிகள், ஆட்டுக்கல், டயர்கள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளத் தவறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai