கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் இரண்டு பசுக்கள் உயிரிழந்ததையடுத்து, அதைக் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்குச் சொந்தமான இரண்டு பசுக்கள் மேய்ச்சலுக்குச் சென்றபோது, தேவராஜ் என்பவருக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை தாக்கி இறந்தது தெரியவந்தது.
இதனால், அப்பகுதி மக்கள் கடும் அச்சத்துக்குள்ளாகி உள்ளனர். மேலும், இதுகுறித்த தகவலின் பேரில் கோத்தகிரி வனச் சரகர் சீனவாசன், கால்நாடை மருத்துவர் ராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் சிறுத்தை தாக்கி பசுக்கள் இறந்தது தெரியவந்தது. குடியிருப்புகளுக்கு மிக அருகில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, அந்த சிறுத்தையைக் கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத் துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.