மேட்டுப்பாளையத்தில் மக்கள் நீதிமன்றம்: 403 வழக்குகளுக்குத் தீர்வு

மேட்டுப்பாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில்(லோக் அதாலத்) 403 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. மேட்டுப்பாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த ந

மேட்டுப்பாளையம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில்(லோக் அதாலத்) 403 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
மேட்டுப்பாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, மேட்டுப்பாளையம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி ராமநாதன், மேட்டுப்பாளையம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் சரவணபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், குற்றவியல், ஜீவானாம்சம் , வங்கி நிலுவை தொகை, காசோலை, குடும்ப நல வழக்குகள் என 970 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு 403 வழக்குகளில் ரூ. 49 லட்சத்து 69 ஆயிரத்துக்கு தீர்வுகாணப்பட்டது.
வழக்கு விசாரணையில் சமூக ஆர்வலர் ராம்குமார், அரசு குற்றவியல் வழக்குரைஞர் இஸ்மாயில், மூத்த வழக்குரைஞர்கள் வீரபத்திரன், நடராஜ், பழனிசாமி, சாந்தமூர்த்தி, உமர்பாரூக், ரஹமத்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com