Enable Javscript for better performance
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் செந்தமிழ்ச் சங்க விழா- Dinamani

சுடச்சுட

    

    அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் செந்தமிழ்ச் சங்க விழா

    By DIN  |   Published on : 09th February 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை சார்பில் செந்தமிழ்ச் சங்கம்,    நடத்திய முப்பெரும் செந்தமிழ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, கார்டைட் தொழிலக மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், தமிழர் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து, சிறுவர்களுக்கான ஓட்டப் பந்தயம், பெரியவர்களுக்கான பானை உடைக்கும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி ஆகியவை நடைபெற்றன. பெண்கள், வண்ணமிகு கோலங்களிட்டு, கோலப் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். 
    கார்டைட் தொழிலகக் கலையரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழா கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, கார்டைட் தொழிலகப் பொது மேலாளர் பி.கே.சிங், ரேணு சிங் ஆகியோர் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கிவைத்தனர். 
    விழா நிகழ்ச்சிகளை, செந்தமிழ்ச் சங்கத்தின் கெளரவத் தலைவர் சரவணகுமார் தொகுத்து  வழங்கினார். செந்தமிழ்ச் சங்கத் தலைவர் மணிமாறன் வரவேற்றார். 
    இவ்விழாவில், சங்கத்தின் சார்பாக 600-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடுவதில், பெரும் பங்காற்றிய முருகாண்டி, மாரிமுத்து ஆகியோருக்கு பொது மேலாளர் நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தார்.
    மேலும், திருவள்ளுவரைப் போற்றிடும் விதமாக செல்வன்  திலக்ஷன், பாரதியார் தினத்தைப் பற்றி  மணிகண்டன், தமிழர் பண்பாடு, பொங்கல் விழா குறித்து சி.எஃப். பள்ளித் தமிழ் ஆசிரியர்  கார்த்திகேயன், செந்தமிழ்ச் சங்கத்தின் அறிமுகம் மற்றும் செயல்பாடுகள் குறித்து நந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர்.  
    விழாவில் மாயன் கலைக் குழுவினரின் ராஜவாத்தியம், சிலம்பம், நாட்டுப்புற நடனம், பரதம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் வரவேற்பைப் பெற்றன. இந்த விழாவில், இணைப் பொது மேலாளர்கள் குமார், பாலசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.  
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் சங்கத்தின் நிர்வாகிகள் கலையரசன், பரதன், மணி, குப்புசாமி, சேர்மராஜ், கதிர், குமார், வெங்கடேஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இளஞ்செல்வம் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai