Enable Javscript for better performance
இத்தலாரில் மோட்டார் திருடிய இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மஞ்சூர் அருகே, இத்தலார் கிராமத்தில் மோட்டார் திருடிய 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    மஞ்சூர் அருகே, இத்தலார் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் மகன் பிரபாகரன். இவருக்கு, அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அங்கு பிரபாகரன் மோட்டார் மூலமாகப் பயிர்களுக்கு புதன்கிழமை இரவு 11.30 மணி வரை தண்ணீர் பாய்ச்சி உள்ளார். பின்னர், வீட்டுக்குச் சென்றுவிட்டு வியாழக்கிழமை அதிகாலை மீண்டும் வந்து பார்த்தபோது விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மோட்டாரைக் காணவில்லை. 
    இதுதொடர்பாக அருகிலிருந்தவர்களிடம் விசாரணை செய்ததில் இத்தலார் இந்திரா நகர் கிராமத்தைச் சேர்ந்த ராஜு மகன் தமிழ்வாணன் (எ) மணி (26), செல்வராஜ் மகன் வேலாயுதம் (36) ஆகியோர் இணைந்து பிரபாகரனின் விளை நிலத்தில் இருந்த மோட்டாரைத் திருடி அருகில் உள்ள புதரில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
    இதுகுறித்து,  எமரால்டு காவல் நிலையத்தில் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் மணி, வேலாயுதம் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ரூ. 35,000 மதிப்புள்ள மோட்டாரைத் திருடியதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். பின்னர் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai