Enable Javscript for better performance
காவல் துறை சார்பில் பழங்குடியினருக்கு நலத் திட்ட உதவி- Dinamani

சுடச்சுட

    

    காவல் துறை சார்பில் பழங்குடியினருக்கு நலத் திட்ட உதவி

    By DIN  |   Published on : 09th February 2018 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் காவல் துறை சார்பில் பழங்குடி மக்களுக்கு புதன்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    மசினகுடியை அடுத்துள்ள மாவநள்ளா பகுதியில் உள்ள குரும்பர்பாடி பழங்குடியினர் கிராம மக்களுக்கு காவல் துறை சார்பில் படுக்கை, போர்வை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனை மசினகுடி தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் விஜயன் தலைமையில், காவல் துறையைச் சேர்ந்த மகேஷ், அருண் உள்ளிட்டோர் பங்கேற்று நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai