Enable Javscript for better performance
குன்னூரில் யானைக் குட்டி சாவு- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரி மாவட்டம், குன்னூரில் உயிரிழந்த நிலையில் யானைக் குட்டியின் உடல் வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    குன்னூர் சரகம், லேம்ஸ்ராக் காவல் பகுதிக்கு உள்பட்ட சிங்காரா தனியார் தேயிலைத் தோட்டத்துக்குச் சொந்தமான கீழ்சிங்காரா தேயிலைத் தோட்டத்தில், பிறந்து சில மாதங்களேயான ஆண் யானைக் குட்டி ஒன்று இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
    அதன்பேரில் வனச் சரக அலுவலர் தலைமையிலும், நீலகிரி காணுயிர் சங்கத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள் முன்னிலையிலும், ஜெகதளா கால்நடை மருத்துவர் யானைக் குட்டியின் உடலைப் பரிசோதனை செய்தார். அதன் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. 
    இதையடுத்து, யானைக் குட்டியின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai