Enable Javscript for better performance
தூதூர்மட்டம் கிராமத்தில் சாலைக்கு வரும் காட்டெருமைகள்: வனத் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தூதூர்மட்டம் கிராமத்தில் சாலைக்கு வரும் காட்டெருமைகள்: வனத் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 09th February 2018 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மஞ்சூர் அருகே உள்ள தூதூர்மட்டம் கிராமத்தில் சாலைக்கு வரும் காட்டெருமைகளை வனத் துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    மஞ்சூர் பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், பெங்கால்மட்டம், கைகாட்டி, குந்தா, எடக்காடு, தங்காடு, பாலகொலா, தூதூர்மட்டம், கொலக்கம்பை உள்ளிட்ட பகுதிகளில் தனியார் தேயிலைத் தோட்டங்கள், மலைத் தோட்டக் காய்கறி விளை நிலங்கள் அதிக அளவில் உள்ளன. மேலும், இப்பகுதியையொட்டி அடர்ந்த வனப் பகுதியும் உள்ளது. இங்கிருந்து கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப் பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி, குடியிருப்புகள், தேயிலைத் தோட்டங்கள், விளை நிலங்களுக்குள் நுழைந்து பொது மக்களை அச்சுறுத்தி வருகின்றன. குறிப்பாக கொலக்கம்பை, சட்டன் , தூதூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் தேயிலைத் தோட்டங்களில் அதிக அளவில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றன. 
    அவர்கள் அடிக்கடி வன விலங்குகளால் தாக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காட்டெருமைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்துப் பகுதிகளிலும் அவை கூட்டம் கூட்டமாக நடமாடத் தொடங்கி உள்ளன. 
    இதனால் பொது மக்கள் மட்டுமின்றி பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
    இந்நிலையில், தூதூர்மட்டம் பகுதியில் பனியில் கருகிய விளை நிலங்கள் பீன்ஸ் பயிரிடுவதற்காகப் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், காட்டெருமைகளுக்குப் போதிய அளவில் உணவு கிடைக்காததால் அவை சாலைக்கு வருவது அதிகரித்துள்ளது. இதை வனத் துறையினர் கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai