Enable Javscript for better performance
ஆதம் நீரூற்றுப் பகுதியில் மாற்றங்கள் செய்ய முடிவு: பொதுமக்களிடம் கருத்துக் கேட்கிறார் ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    ஆதம் நீரூற்றுப் பகுதியில் மாற்றங்கள் செய்ய முடிவு: பொதுமக்களிடம் கருத்துக் கேட்கிறார் ஆட்சியர்

    By DIN  |   Published on : 24th March 2018 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உதகை நகரின் நுழைவுப் பகுதியான சேரிங்கிராஸில் அமைந்துள்ள ஆதம் நீரூற்றுப் பகுதியில் மாற்றங்கள் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன.
    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஆங்கிலேயர்கள் வசித்து வந்தனர். அப்போது, அவர்கள் லண்டனில் உள்ள சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள ஆதம்
    நீரூற்றைப்போல சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் வடிவமைத்து உதகையில் தற்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வைத்திருந்தனர்.
    பின்னர் அதை உதகையில் சேரிங்கிராஸ் பகுதியின் மையப் பகுதிக்கு மாற்றி அமைத்தனர். இன்றளவும் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இரவு நேரங்களில் புகைப்படமெடுக்க இது மிகச்சிறந்த இடமாக உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இந்நீரூற்றைச் சுற்றி ஒளிரும் மின்விளக்குகள் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.
    இந்நிலையில், வரும் கோடை சீசனை கருத்தில் கொண்டு சேரிங்கிராஸில் ஆதம் நீரூற்று அமைந்துள்ள பகுதியில் சில மாற்றங்களை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களின் கருத்துகளைக் கேட்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
    நீலகிரி மாவட்டத்தில் கோடைப் பருவத்தில் ஒவ்வோர் ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த ஆண்டு கோடைப் பருவத்தில் வாகனப் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உதகையில் சேரிங்கிராஸ், ஸ்கேட்டிங் மைதானம், ஏடிசி மற்றும் சந்தைப் பகுதிகளில் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
    கோடைப் பருவத்தில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்ல காவல்துறையின் வேண்டுகோளுக்கிணங்க சேரிங்கிராஸ் பகுதியில் ஆதம் நீரூற்று அமைந்துள்ள இடத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இது தொடர்பாக இம்மாதம் 26ஆம் தேதி (திங்கள்கிழமை) பிற்பகல் 3 மணி அளவில்
    சேரிங்கிராஸ் பகுதி பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை ஆட்சியரிடம் தெரிவிக்கலாம்.
    தன்னார்வ அமைப்புகள்
    அதிருப்தி...: நூறாண்டுகள் பழமையானதும், உதகை நகரின் அழகிய நுழைவாயிலான சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள ஆதம் நீரூற்றுப் பகுதியில் மாற்றங்கள் மேற்கொள்வதற்கு உதகை அழகுணர்வுக் குழு உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai