Enable Javscript for better performance
உதகையில் இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்யும் மழை- Dinamani

சுடச்சுட

    

    உதகை, அதன் சுற்றுப் பகுதிகளில் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    உதகையில் கோடை சீசன் தொடங்கவுள்ள நிலையில் தற்போது தினந்தோறும் தூறல் மழை பெய்து வருகிறது. இதனால், நகரிலுள்ள பூங்காக்கள் பொலிவு பெற்றுள்ளன. புல்வெளிகளும் பசுமையாகக் காட்சி அளிக்கின்றன. கோடை சீசனுக்காக மலர்ப் பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ள மலர்ச் செடிகளுக்கு மழை ஏதுவானதாக அமைந்துள்ளதால் பூங்காக்களை பராமரிப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூறல் மழையின் காரணமாக நகரில் நிலவி வந்த குளிரும் குறைந்து இதமான காலநிலை நிலவுகிறது. குடிநீர்ப் பிரச்னைக்கும் ஓரளவு தீர்வு ஏற்பட்டுள்ளது.
    மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் உதகையில் அதிகபட்சமாக 13.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கெத்தை மற்றும் குந்தாவில் தலா 12 மி.மீ., கேத்தியில் 4 மி.மீ., குன்னூரில் 2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai