Enable Javscript for better performance
கூடலூரில் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு சுவீடன் நாட்டு ஆசிரியர்கள் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    கூடலூரில் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு சுவீடன் நாட்டு ஆசிரியர்கள் பயிற்சி

    By DIN  |   Published on : 24th March 2018 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூரிலுள்ள தொழிற்பயிற்சி மைய மாணவர்களுக்கு சுவீடன் நாட்டு ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை பயிற்சி அளித்தனர்.
    கூடலூர் தோட்டத் தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்திற்கு சுவீடனிலிருந்து வந்திருக்கும் நிக்லாஸ் எங்க்ஸ்ட்ராம், ஜோனாஸ் எரிக்சன் ஆகியோர் மின் தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர். இங்குள்ள மாணவர்களின் மின் தொழில்நுட்பத் திறன் குறித்தும் ஆய்வு செய்தனர்.
    பயிற்சிக்கான வரவேற்பு நிகழ்ச்சி தொழிற்பயிற்சி மைய அரங்கில் நடைபெற்றது. பயிற்சி மைய முதல்வர் ஷாஜி எம்.ஜார்ஜ், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் கே.பி.முகமது, ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர். இங்குள்ள மாணவர்களை சுவீடனுக்கு அழைத்துச் சென்று மின் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிப்பதாகவும் அந்நாட்டு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai