Enable Javscript for better performance
சாலையோர எஸ்டேட்களில் உலவும் காட்டெருமைகள்- Dinamani

சுடச்சுட

    

    குன்னுôர் அருகே சேலாஸ் பகுதியில் உள்ள சாலையோர எஸ்டேட்களில் காட்டெருமைகள் உலவுவதால் தேயிலைத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
    நீலகிரி மாவட்டம், குன்னுர் அருகே சேலாஸ் பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன. இவை எஸ்டேட்களிலும், சாலைகளிலும் அவ்வப்போது உணவு தேடி சுற்றித் திரிகின்றன.
    தற்போது, இப்பகுதிகளில் உள்ள எஸ்டேட்களில் 10}க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன் உலவுகின்றன. இதனால் தேயிலை பறிக்க முடியாமல், காட்டெருமைகளுக்கு அஞ்சி தொழிலாளர்கள் தப்பியோடும் நிலை ஏற்பட்டுள்ளது.
    இப்பகுதியில் ரேஷன் கடை, பள்ளிகள், கடை வீதி ஆகியவை அமைந்துள்ளதால், மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, பொதுமக்களை அச்சுறுத்தும் காட்டெருமைகளை வனப் பகுதிக்குள் துரத்த வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai