Enable Javscript for better performance
பாக்கனா பகுதியில் அச்சுறுத்தும் யானை: வனத்துக்குள் துரத்த கும்கிகள் வரவழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பாக்கனா பகுதியில் அச்சுறுத்தும் யானை: வனத்துக்குள் துரத்த கும்கிகள் வரவழைப்பு

    By DIN  |   Published on : 24th March 2018 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூடலூரை அடுத்துள்ள பாக்கனா கிராமத்தில் அச்சுறுத்தியும் வரும் ஒற்றை யானையைக் காட்டுக்குள் துரத்த, முதுமலையிலிருந்து இரண்டு கும்கி யானைகள் வெள்ளிக்கிழமை வரவழைக்கப்பட்டுள்ளன.
    நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்திலுள்ள பாக்கனா கிராமத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை சுற்றித் திரிகிறது. இது பொதுமக்களைத் தாக்கியும், பயிர்களை நாசம் செய்தும் அச்சுறுத்தி வருகிறது.
    இந்த ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் துரத்த வனத் துறையினர் பல்வேறு வழிகளில் முயற்சித்தும் முடியவில்லை. எனவே அப்பகுதி மக்கள் யானையிடமிருந்து பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
    அதையடுத்து, மாவட்ட நிர்வாகமும், வனத் துறையும் இணைந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து சேரன், முதுமலை ஆகிய 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கும்கியானைகள் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai