Enable Javscript for better performance
மாற்றுச் சக்கரம் இன்றி இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுச் சக்கரம் இன்றி இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்

    By DIN  |   Published on : 24th March 2018 02:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுச் சக்கரம் இன்றி இயக்கப்படும் அரசுப் பேருந்துகளால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
    வால்பாறையில் இருந்து திருப்பூர், பழனி, கோவை, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சில குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் மாற்றுச் சக்கரம் கொண்டு செல்கின்றனர். இதனால் பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் பேருந்துகளின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டால் அதை உடனடியாக மாற்றுவதற்கு பெரும்பாலான பேருந்துகளில் மாற்றுச் சக்கரம் இருப்பதில்லை.
    இதனால், அந்த வழியாக வரும் வேறு அரசுப் பேருந்தில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைக்கின்றனர். இதேபோல, எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டால் பேருந்து நடுவழியிலேயே நிறுத்தப்பட்டு, வால்பாறை பணிமனையில் இருந்து மாற்று சக்கரம் கொண்டு சென்று மாற்றிய பின்னரே அந்தப் பேருந்து மீண்டும் இயக்கப்படுகிறது.
    இந்நிலையில், சின்கோனா, ரயான் டிவிஷன் சென்று திரும்பிய அரசுப் பேருந்தின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டு வியாழக்கிழமை காலை 8 மணியளவில் நடுவழியில் நின்றுவிட்டது.
    இப்பேருந்து மாற்றுச் சக்கரம் இல்லாததால், பேருந்தில் இருந்த பயணிகள் வேறு வழியின்றி சில கி.மீ. தூரம் நடந்து வந்து வேறு பேருந்து மூலமாக வால்பாறை வந்துள்ளனர். இதனால், பள்ளி மாணவர்கள், மருத்துவமனைக்கு வந்த எஸ்டேட் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். காலை 8 மணிக்கு நின்ற பேருந்தை எடுத்த வரப் போக்குவரத்து ஊழியர்கள் மாலை 4 மணிக்கு மேல் மாற்றுச் சக்கரத்துடன் சென்றுள்ளனர்.
    வால்பாறை போக்குவரத்துக்கழகப் பணிமனையில் போதுமான சக்கரங்கள் மற்றும் உதிரிபாகங்கள் இல்லாததே இதற்குக் காரணம் என ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai