Enable Javscript for better performance
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: 86 பேர் பங்கேற்கவில்லை- Dinamani

சுடச்சுட

    

    நீலகிரி மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வணிகவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளில் 86 பேர் பங்கேற்கவில்லை.
    நீலகிரி மாவட்டத்தில் 37 தேர்வு மையங்களில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற வணிகவியல் தேர்வில் தகுதியுடைய மாணவர்கள் 3,530 பேரில் 3,446 பேர் மட்டுமே தேர்வெழுதியுள்ளனர். 84 பேர் தேர்வெழுதவில்லை. புவியியல் பாடத்தில் தேர்வெழுத வேண்டிய 38 பேரில் 36 பேர் மட்டுமே தேர்வெழுதியுள்ளனர். 2 பேர் தேர்வெழுதவில்லை. தனித் தேர்வர்களைப் பொருத்தமட்டில் 79 பேர் தேர்வெழுதியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai