Enable Javscript for better performance
உதகையில் புனித வெள்ளி அனுசரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    உதகையில் அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளிஅனுசரிக்கப்பட்டது. 
    தவக் காலத்தின் புனித வாரத்தை ஒட்டி நடைபெற்றுவரும் நிகழ்ச்சிகளில் திருஇருதய ஆண்டவர் தேவாலயத்தில் உதகை மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் வியாழக்கிழமை இரவு பாதம் கழுவும் சடங்கை முடித்தார்.  வெள்ளிக்கிழமை  உதகை மரியன்னை குன்று பகுதியில் உள்ள மோட்சராக்கினி மாதா தேவாலயத்தில் புனித வெள்ளிக்கிக்கான சிறப்பு சிலுவைப் பாதையை வழி நடத்தினார்.
     உதகை காந்தல் பகுதியில் உள்ள குருசடி திருத் தலத்தில் இயேசுவின் பாடுகளை விவரிக்கும் கல்வாரி தியானமும்,  கெத்சமெனி தியானமும் பங்குத் தந்தை பீட்டர் தலைமையில் நடைபெற்றது. 
     உதகை புனித திரேசன்னை  தேவாலயத்தில் பங்குத் தந்தை பெனடிக்ட்  தலைமையில் சிறப்பு தியானமும்,  திருச்சிலுவை முத்தியும் நடைபெற்றது. இதில், புனித திரேசன்னை உயர்நிலைப் பள்ளித் தாளாளர் அமல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai