Enable Javscript for better performance
குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பிரசாரம்

    By DIN  |   Published on : 31st March 2018 08:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து அரசுப் பள்ளி மாணவர்கள் சுற்றுலாப்பயணிகளிடம் வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
    கோத்தகிரிஅருகே உள்ள குஞ்சப்பனை சுங்கச் சாவடி மற்றும் சோதனைச் சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் குஞ்சப்பனை அரசு உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். 
    இந் நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் வினுதாஸ், ஆசிரியர் கிருஷ்ணராஜ், பிளாஸ்டிக் தடுப்பு பிரிவு பொறுப்பாளர் இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai