Enable Javscript for better performance
குன்னூரில் ஏப்ரல் 2 முதல் புத்தகத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர் ஒய்.எம்.சி.ஏ. அருகே, ஜான்ஸ் பாரீஷ் ஹாலில் ஏப்ரல் 2 முதல் 8ஆம் தேதி வரை  புத்தகத் திருவிழா, கண்காட்சி மற்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட  உள்ளன என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளது. 
    இதுகுறித்து அந்த சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:  
    குன்னூர் ஒய்.எம்.சி.ஏ. அருகே, ஜான்ஸ் பாரீஷ் ஹாலில் வரும் ஏப்ரல் 2 முதல் 8ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சியை எழுத்தாளர் ராஜதுரை தொடங்கி வைக்கிறார். 3ஆம் தேதி "வானம் வசப்படும்' தலைப்பில் கருத்துரை இடம் பெறுகிறது. மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உள்பட பலர் பங்கேற்கின்றனர்.  4ஆம் தேதி வாசிப்பின் வாசல்,  5ஆம் தேதி குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடுதல், இயக்குநர்கள் மற்றும் படைப்பாளர்களின் கலந்துரையாடல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 
    விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகள், தாங்கள் படித்த புத்தகம் தொடர்பான கட்டுரையை எழுதி 6ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு 7ஆம் தேதி நடக்கும் விழாவில் பரிசு வழங்கப்பட உள்ளது.
    8ஆம் தேதி, எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் இலக்கிய ஆர்வலர்கள் சங்கமம் நிகழ்ச்சி, எதிர்கால திட்டங்கள் குறித்த விவாதம் நடக்கிறது. ஏற்பாடுகளை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் தன்னார்வ அமைப்புகள் செய்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai