Enable Javscript for better performance
கோத்தகிரி  முடியக்கம்பை கிராமத்தில் ரூ. 8 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம்- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரி  முடியக்கம்பை கிராமத்தில் ரூ. 8 லட்சத்தில் பல்நோக்கு கட்டடம்

    By DIN  |   Published on : 31st March 2018 07:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோத்தகிரி அருகே முடியக்கம்பை கிராமத்தில் ரூ. 8 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு  வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
    கோத்தகிரி ஒன்றியம், ஜக்கனாரை ஊராட்சிக்கு உள்பட்ட முடியகம்பை கிராமத்தில் பல்நோக்கு கட்டடம் கட்டித்தரக் கோரி கடந்த பலஆண்டுகளாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதைத் தொடர்ந்து பல்நோக்கு கட்டடம் கட்டுவதற்காக கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் மூலம் ரூ. 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப் பணிக்கான பூமி பூஜையை குன்னூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாந்திராமு தொடங்கி வைத்தார்.
    நிகழ்ச்சியில் ஜக்கனாரை ஊராட்சிச் செயலர், பொதுமக்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai