Enable Javscript for better performance
ஈழுவ, தீயா இன மாணவர்களுக்கு  ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஈழுவ, தீயா இன மாணவர்களுக்கு  ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 18th May 2018 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஈழுவ, தீயா இன மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
      குந்தா தாலுகா மலையாளிகள் நலச் சங்கத்தின் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
      நீலகிரியில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மலையாள ஈழுவ, தீயா இன மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலான மலையாள மக்கள் தேயிலைத் தோட்டங்களில் கூலித் தொழிலாளர்களாகவும், ஹோட்டல், தேநீர்க் கடை, பேக்கிரி கடைத் தொழிலாளர்களாகவும்,  தைலம் காய்ச்சும் தொழிலாளர்களாகவும் உள்ளனர். தங்களது முன்னோர்கள் காலம் தொட்டே பரம்பரையாக இந்த மாவட்டத்தில் வசித்து வருவதால் பெரும்பாலான மலையாள மக்களுக்கு இந்த மாவட்டமே பூர்விகமாக உள்ளது. 
      இங்குள்ள மலையாள மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குவது கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் இவ்வினத்தை சேர்ந்த குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மலையாள இன மாணவர்களுக்கு ஜாதி சான்று கிடைக்காத காரணத்தால் இட ஒதுக்கீடு பெற, உயர் கல்வி கற்க, கல்வி உதவித் தொகை, கல்விக் கடன்கள் பெற முடியாமலும்,  வேலைவாய்ப்பு, அரசுச் சலுகைகளை பெறமுடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
      தற்போது பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கவுள்ள நிலையில்  ஈழுவ, தீயா இனக் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி இந்த இனத்தவர்களுக்கு பிற்படுத்தபட்டோர் என ஜாதி சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai