Enable Javscript for better performance
கோத்தகிரியில் எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரியில் எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

    By DIN  |   Published on : 18th May 2018 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உதகையில் 122-ஆவது மலர்க் காட்சியைத் தொடங்கிவைப்பதற்காகச் செல்லும் வழியில் கோத்தகிரிக்கு வியாழக்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி  எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருக்கு அதிமுகவினர்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.
      நீலகிரி மாவட்டம், உதகையில் 122-ஆவது மலர்க் காட்சியை முதல்வர் எடிப்பாடி  பழனிசாமி வெள்ளிக்கிழமை (மே 18) தொடங்கிவைக்கிறார்.  இதற்காக அவர் மேட்டுபாளையம், குஞ்சப்பனை வழியாக வியாழக்கிழமை கோத்தகிரி வந்தடைந்தார்.
    அவருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதற்குப் பிறகு முதல்வர்  கோத்தகிரி டானிங்டன்  பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
        உதகை வந்தடைந்த அவருக்கு தொட்டபெட்டா மற்றும் சேரிங்கிராஸ் பகுதியில் அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் தமிழகம் மாளிகைக்கு சென்றடைந்தார். 
        மாநிலங்களவை  உறுப்பினரும்,  நீலகிரி  மாவட்ட அதிமுக செயலாளருமான  கே.ஆர் அர்ஜுணன், மக்களவை உறுப்பினர்  சி .கோபாலகிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினர்  சாந்தி ராமு உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai