Enable Javscript for better performance
மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலையில் பட்டுப்போன மரங்களை அகற்ற வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மஞ்சூர்-கிண்ணக்கொரை சாலையில் பட்டுப்போன மரங்களை அகற்ற வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 18th May 2018 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் பட்டுப்போன மரங்களையும், முறிந்து விழுந்துள்ள மரங்களையும் அகற்ற வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
      தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள கிண்ணக்கொரை கிராமம் மஞ்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது. கிண்ணக்கொரையைச் சுற்றிலும் 10-க்கும் மேற்பட்டகிராமங்கள் உள்ளன. தாய்சோலைப் பகுதியில் இருந்து கிண்ணக்கொரை வரை சுமார் 20 கி.மீ. தொலைவு சாலை அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. சாலையின் இருபுறங்களிலும் ஏரளாமான மரங்கள் உள்ளன. இதில்,  பெரும்பாலான மரங்கள் பட்டுபோய் உள்ளன. 
     பலத்த காற்று வீசும்போதும், மழைக் காலத்திலும் இந்த சாலையில் உள்ள பட்டுப்போன மரங்கள் வேருடன் முறிந்து விழுகின்றன. இதனால், மங்சூர்- கிண்ணக்கொரை இடையே வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
      மாற்றுப் பாதை இல்லாததால் சாலையில் விழும் மரங்களை அகற்றும் வரை வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது. தாய்சோலை- கிண்ணக்கொரை இடையே ஒரு மரம் முறிந்து சாலையின் மறுபுறமுள்ள மற்றொரு மரத்தின் மீது சாய்ந்து கிடக்கிறது. அந்தரத்தில் தொங்குவதுபோல உள்ள இந்த மரத்தை  உடனடியாக அப்புறப்படுத்தினால்தான் அவ்வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமின்றி பயணிக்க முடியும்.
    தாய்சோலை முதல் கிண்ணக்கொரை வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள பட்டுப்போன மரங்கள், முறிந்து விழும் நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai