அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட  வீடுகளைச் சீரமைக்க வலியுறுத்தல்

மஞ்சூர் அருகே உள்ள பெள்ளத்திக்கம்பை, தும்பனேரிக்கம்பை பழங்குடியின ஆதிவாசி கிராமங்களில் அரசு

மஞ்சூர் அருகே உள்ள பெள்ளத்திக்கம்பை, தும்பனேரிக்கம்பை பழங்குடியின ஆதிவாசி கிராமங்களில் அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட குடியிருப்புகளைச் சீரமைத்துத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சூர் அருகே தமிழக - கேரள மாநில எல்லைப் பகுதிகளை ஒட்டி கிண்ணக்கொரை, இரிசீகை, தனியகண்டி, பெள்ளத்திக்கம்பை,தும்பனேரிக்கம்பை உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.  
இதில், பெள்ளதிக்கம்பை, தும்பனேரிக்கம்பை ஆகிய பழங்குடியின ஆதிவாசி கிராமங்களில் அரசு சார்பில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் தற்போது பல ஆண்டுகளாகச் சீரமைக்கப்படாமல் பழுதடைந்த நிலையில் உள்ளன. 
இதனால் இரவு நேரத்தில் வனத்தில் இருந்து வரும் கரடி, காட்டெருமை, சிறுத்தை, முள்ளம்பன்றி, குரங்கு, யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து வீடுகளைச் சேதப்படுத்தி செல்கின்றன. 
இதனால், அப்பகுதியில் வனவிலங்குகள் உள்ளே நுழையாமல் இருக்கத் தடுப்புச் சுவரோ அல்லது பாதுகாப்பு வேலிகளோ அமைத்துத்தர வேண்டும். அத்துடன் வனவிலங்குகளால் சேதமடைந்துள்ள வீடுகள், இயற்கைச் சீற்றத்தால் சிதிலமடைந்த வீடுகளைச் சீரமைக்கத் தேவையான நிதியை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com