மஞ்சூர் - கோவை சாலையில் மண் திட்டுகள் அதிகரிப்பு: வாகனப் போக்குவரத்தில் சிக்கல்

மஞ்சூர் - கோவை சாலையில் மண் திட்டுகள் அதிகரித்துள்ளதால் வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. 

மஞ்சூர் - கோவை சாலையில் மண் திட்டுகள் அதிகரித்துள்ளதால் வாகனங்கள் சென்று வருவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. 
மஞ்சூரிலிருந்து கெத்தை, முள்ளி, காரமடை வழியாக கோவைக்கு அரசு உள்ளிட்ட தனியார் வாகனங்கள் சென்று வருகினறன. சமீபத்தில் பெய்த மழையால் கெத்தையில் இருந்து முள்ளி வரை சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சாலையில் விழுந்துள்ள மண்ணை நெடுஞ்சாலை துறையினர் முறையாக அகற்றாததால் மண் திட்டுகள் அதிகரித்து சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. 
 மேலும், இருபுறமும் வளர்ந்துள்ள முள்புதர்கள் பல மாதங்களாக அகற்றப்படவில்லை. பேருந்துகளில் ஜன்னல் ஓரங்களில் அமர்ந்து செல்லும் பயணிகள் அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. 
நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் பாதிப்பு ஏற்படும் சமயத்தில் பர்லியாறு சாலை, கோத்தகிரி குஞ்சப்பணை சாலையில் பாதிப்பு நேரிட்டால் போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயத்தைப் போக்கும் வகையில் மஞ்சூரில் இருந்து கோவை செல்ல 3ஆவது மாற்றுப் பாதையாக இதை மாற்ற வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013ஆம் ஆண்டு அறிவித்தார். 
அதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இப்பாதை குறித்து ஆய்வு செய்தனர். ஆனால், தற்போது 4 ஆண்டுகள் கடந்தும் அதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இச்சாலையின் நிலை உள்ளது. உதகை மற்றும் மேட்டுப்பாளையம் கோட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் இச்சாலை இருப்பதால்அதிகாரிகள் ஆய்வு செய்து மண் திட்டு, முள்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com